Monday, 22 April 2013

நண்பர்களே வணக்கம்! 

ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத்தில் அனைத்துத்தரப்பு மக்களையும் எட்டியிருக்கிறது. அரசியல் தளத்தின் ஒருபகுதியில் மட்டும் பேசப்பட்டுவந்த நிலை மாறி இப்போது சிவில் சமூகம் என சொல்லப்படும் பகுதியையும் அது ஆக்கிரமித்திருக்கிறது. இதில் ஊடகங்களின் பங்களிப்பு முதன்மையானது. 

இப்போது உணர்வு நிலையில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியை அறிவுத் தளத்துக்குக் கொண்டு செல்வதன்மூலமே அதைப் பயனுள்ள வகையில் வளர்த்தெடுக்க முடியும். 
தற்போதைய எழுச்சியை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ளவே அரசியல் கட்சிகள் முனையும். அது ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நன்மை பயப்பதாக இருக்காது. 

ஒருபுறம் வலதுசாரித் தன்மைகொண்டு அடிப்படைவாதமாக உருவெடுக்கும் தமிழ்த் தேசியவாத அமைப்புகள்; இன்னொருபுறம் சுயநிர்ணய உரிமையைக்கூட அங்கீகரிக்காமல் தேசிய சகதியில் சிக்குண்டு கிடக்கும் மைய நீரோட்ட இடதுசாரிக் கட்சிகள். இவற்றுக்கு அப்பால் இன்னும் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியத்துக்கும் தலித் அரசியலுக்குமிடையே ஊடாடும் தலித் இயக்கங்கள்- இப்படி தமிழக அரசியல் களம் கூறுபட்டுக் கிடக்கிறது. அதனால் கருத்தியல் தளத்திலும் குழப்பம் நிலவுகிறது. 

இந்திய அரசியலில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலை மாறி இப்போது தனிமைப்படுத்தப்படும் சூழல் துலக்கமாகத் தெரிகிறது. டெல்லியை மட்டுமே மையப்படுத்தி சிந்திக்கும் அதிகாரவர்க்கம் தமிழகத்தை ஒவ்வாமையோடும் வெறுப்போடும்தான் பார்க்கிறது. அதன் காரணமாகத் தமிழகத்தை ராணுவமயப் படுத்தவும்,வடகிழக்கு மாநிலங்களைப்போல பதற்றமான பகுதியாக அறிவிக்கவும் அவர்கள் முனையக்கூடும். 

மாநில உரிமைகளுக்கான நியாயமான போராட்டங்களே பிராந்தியக் கட்சிகள் உருவெடுக்கக் காரணம். அவை அதிகாரத்துக்கு வந்தபிறகு தேசியக் கட்சிகளின் பிரதி பிம்பங்களாகிவிட்டன. தற்போது எழுந்திருக்கும் குரல்களும் அவர்களால் தன்வயப்படுத்தப்படலாம் அல்லது அவை வலுவிழந்து காணாமல் போகலாம். ஜனநாயகத்தை விரும்புவோர் அதற்கு அனுமதிக்கக் கூடாது. 

இந்நிலையில், தற்போதைய எழுச்சிக்கு அரசியல் தலைமை கொடுப்பது யார் என்பதைவிடவும் கருத்தியல் தலைமை கொடுப்பது எப்படி என ஆராய்வதே உடனடித் தேவை என மணற்கேணி கருதுகிறது. அதற்காகவே இந்த ஆய்வரங்கு. ஈழப் போராட்டத்தின் கடந்த காலத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்று எதிர்காலத்துக்கு ஒளியேற்றும் ஆய்வுகளை மணற்கேணி வரவேற்கிறது. வெற்று முழக்கங்களைத் தவிர்த்து விவாதங்களை முன்னெடுக்க விழைகிறது..... 

Saturday, 1 September 2012

Live Fire

Thriller points in every one




I can't seem to face up to the facts 


I'm tense and nervous and,....,,,

 I Can't relax 




I can't sleep 'cause my bed's on fire 


you start a conversation you can't even 





finish it. 


You're talkin' a lot, but you're not sayin' 

anything. 


When I have nothing to say, my lips are 

sealed. 


Say something once, why say it again?  


Don't touch me I'm a real live wire 

                                       -joevi-

Friday, 31 August 2012

Mr.Saint Is Here



    
 Mr.Saint Is Here
போராளிகளே....   Dont Worry....
                                                                                            - ஜோவி 

வாழ்கையில் மனித உயிர் சந்திக்கும் சவால்கள் பல உண்டு..சவால்களை கண்டு துவண்டு போகாமல் நாளுக்கு நாள் நானும் முன்னேறுகிறேன் என்று தமக்கு தாமே சவால் போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவருமே வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் கதாநாயகன் தான்....
நீயும் ஒரு நாள் வெல்வாய்...நீயும் ஒரு கட்டத்தில் சாதிப்பாய்...என்று நமக்குள் ஏதோ ஒரு உணர்வு தூண்டி கொண்டே இருக்கும்....அதை தான் திரைபடபாடல் ஓன்று நமக்கு ஞாபகபடுத்தும்..
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உளத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்....
எத்தகைய ஒரு சமூக அமைப்பிலும் அந்த மனதூண்டல் இன்றும் நம்மை வாழ வைத்து கொண்டு இருக்கிறது...
சமூகத்தில் பிறப்பு, அழுகை, அன்பு, மகிழ்ச்சி, இறப்பு போன்ற போன்ற நியதிகள் இருந்தாலும் கூட..."காதல், பணம், சாம்ராஜ்ய வாழ்க்கை, அந்தஸ்து " போன்ற இடர்பாடுகளுக்குள் சிக்கி பித்து பிடித்த பித்தன் போல என்றும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...இதில்  நீ  பெரியவன், நான் பெரியவன் அவன் மிக சிறியவன், இவன் மிக பெரியவன், என்ற ஒரு அரசியலும் இருக்கிறது...(இதை பதிபவர்கள் தங்களுக்குளேயே விமர்சித்து பாருங்கள் )..அப்படிஎன்றால்  அரசியல் தெரிந்தவன் தான் பிழைக்க தெரிந்தவனா?....இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் கூறும் பல மொழி...
 ....''செய்  அல்லது செத்து மடி''.. 


வலி உனக்கும் உண்டு... எனக்கும் உண்டு... யாராக இருந்தாலும் ஏன் ஐந்தறிவு படைத்த மிருகங்களாக இருந்தாலும் கூட வலி உணர்வு பொருந்தும்...சமூக அமைப்பினுள்; இருக்கும் எந்த மனிதனாக இருந்தாலும் கூட வலியை உணராமல் வாழ்ந்திருக்க முடியாது....இத்தகைய வலிகள் நிறைந்த வாழ்க்கை போராட்டத்தில்  அரசியலில் திளைத்து சமூகத்தை மாற்ற நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களை  உங்களுக்குள்ளேயே  ரத்தம் சொட்ட சொட்ட படு கொலை செய்ய காத்து  கொண்டிருக்கிறான்                                   
                                                                                                      ...Mr.Saint...